தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் செப்டம்பர் 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகாண்டில் செப்டம்பர் 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

டேராடூன்,

நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகம் தணிந்து வந்தாலும், முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் அதுதொடர்பான ஊரடங்கை மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன.

அந்த வகையில் உத்தரகாண்டிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை செப்டம்பர் 14-ந் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஆறு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்