தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி - ஆந்திர துணை முதல் மந்திரி தகவல்

கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்த ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஆந்திர துணை முதல் மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-

கொரோனா 2வது அலை குறைந்து வரும் நிலையில், 3-வது அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிவிட்டு கல்லூரிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு கல்லூரிகள் திறக்கப்படும். இதற்காக சுகாதாரத்துறை உதவியுடன் கல்லூரி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி