தேசிய செய்திகள்

91 தொகுதிகளில் வாக்குப்பதிவு: முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி நடக்கிறது.

அதன்படி ஆந்திரா, தெலுங்கானா, அருணாசல பிரதேசம், அந்தமான், லட்சத்தீவு என 20 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து மேற்படி தொகுதிகளில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்தனர். இவ்வாறு மும்முரமாக நடந்து வந்த வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இதைப்போல ஆந்திரா, சிக்கிம், அருணாசல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அவற்றுக்கான வேட்புமனு தாக்கலும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இவ்வாறு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் இன்றும், நாளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வேட்புமனுக்களை வாபஸ் பெற 28-ந் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை தொடர்ந்த இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அங்கு வாக்குப்பதிவுக்கான பணிகளையும் தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டு உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை