தேசிய செய்திகள்

கன்னியாகுமரி-திப்ரூகார் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அசாம் மாநிலம் திப்ரூகார் மற்றும் கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திப்ரூகார்- கன்னியாகுமரி இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. திப்ரூகாரில் இருந்து இன்று இரவு 7.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 05906) 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

மறுமார்கமாக 4-ந் தேதி (வியாழக்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 05905) 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.50 மணிக்கு திப்ரூகார் சென்றடையும். இதில் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், விஜயவாடா புவனேஸ்வர், கவுகாத்தி வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்