இந்நிலையில் அம்மாநில கவர்னர் ஜெகதீப் தங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அரசியல் சாசனத்தின் 165-வது பிரிவின் அடிப்படையில், மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் பதவியில் இருந்து கிஷோர் தத்தாவின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் தலைமை வக்கீல் பதவி ஏற்ற கிஷோர் தத்தா, மம்தா பானர்ஜி ஆட்சிக்காலத்தில் இப்பதவியை ராஜினாமா செய்த 4-வது வக்கீல் ஆவார்.
இவருக்கு முன், அனிந்திய மித்ரா, பிமல் சட்டர்ஜி, ஜெயந்த மித்ரா ஆகிய அரசு தலைமை வக்கீல்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.