தேசிய செய்திகள்

மத்திய அரசின் திட்டம் குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விமர்சனம்

அரசின் சொத்துகளை குத்தகைக்கு விடும் திட்டத்தை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

அரசின் செத்துகளை குத்தகைக்கு விட்டு அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் கேடி ரூபாய் திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆண்ட 70 ஆண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை என குற்றஞ்சாட்டும் பா.ஜ.க. தற்பேது அதே 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செத்துகளை விற்பதாக குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நாட்டின் சொத்துக்களை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது என விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிர்ச்சி தரும் இந்தத் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மத்திய அரசு அறிவித்துள்ளவை நாட்டின் சொத்துக்கள். அவை பிரதமருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானவை அல்ல. அவற்றை மத்திய அரசு அவர்களின் விருப்பங்களுக்கேற்ப விற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்