தேசிய செய்திகள்

பெட்ரோல் , டீசல் மீதான வரியில் ரூ1 குறைத்தது மே.வங்க அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்காள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொல்கத்தா,

கடந்த இரண்டு வார காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர் விலை ஏற்றத்தில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால், மக்கள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்காள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கூறுகையில், மத்திய அரசானது பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 32.90 ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 31.80 ம் வருவாயாகப் பெறுகிறது.

ஆனால் மாநில அரசோ பெட்ரோல் மற்றும் டீசலுக்கு முறையே ரூ.18.46 மற்றும் ரூ.12.77 மட்டுமே வருவாயாகப் பெறுகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கையானது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறிய ஆறுதலாக இருக்கும்என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்