தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக வாட்ஸ்-அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு எதிராக வாட்ஸ்-அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

வாட்ஸ்-அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கோரப்பட்டுள்ளது. இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் தனிநபர் தரவு பாதுகாப்புக்கு எதிரானது.மேலும் மத்திய அரசின் புதிய வழிமுறை இதற்கு அனுமதி அளித்தால், தனிநபர் பகிர்ந்த அந்தரங்க விவரங்கள், தரவுகளை விசாரணை அமைப்புகளின் தேவைக்காக தனியார் நிறுவனங்கள் சேகரித்து வைக்க நேரிடும். மேலும் ஒருவர் உருவாக்காத செய்தியை பகிரும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும். இது தவறிழைக்காதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இந்த நடவடிக்கை, சர்வதேச அளவிலான கருத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்டவற்றுக்கு எதிரானது. இது அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது என அறிவிக்க வேண்டும்.மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறையை அமல்படுத்த மே 25 கடைசி தேதி என்ற நிலையில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவதை தடுக்கவேண்டும்.

இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்