தேசிய செய்திகள்

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

கேரளாவில் முடியாது என நிராகரிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளன என பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட் பற்றி, முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, மக்களை மையப்படுத்திய, விரிவான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கம் கொண்ட, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும் நல திட்டங்களை வலுப்படுத்தும் வகையிலான பட்ஜெட்டாக உள்ளது என பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் இடதுசாரி அரசாங்கம், கடந்த 10 ஆண்டுகளாக, கேரளாவை ஒரு நவீன மாநிலம் ஆக்குவதுடன், நடுத்தர வருவாய் பெறும் சமூகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக தொடர்ந்து கடுமையாக பணியாற்றி வருகிறது. இது 2022-ம் ஆண்டின் 14-வது ஐந்து ஆண்டு திட்டத்தில் வரையறுத்து கூறப்பட்டு உள்ளது என கூறினார்.

எனினும், கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன என சில பிரிவினர் தெரிவித்தனர். இதனை நிராகரித்த அவர், முடியாது என நிராகரிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம், விழிஞ்சம் துறைமுக 2-ம் கட்ட பணிகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கான தெளிவான எடுத்துக்காட்டுகள் ஆகும் என அவர் கூறினார்.

இதேபோன்று ஓய்வூதியத்திற்கான அரியர் பலன்கள், கல்வி, வேலைவாய்ப்பு, தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கான பலன்கள், நல திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என கேரள முதல்-மந்திரி அலுவலகம் குறிப்பிட்டு உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு