புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ஜனவரி 5ந்தேதி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இன்று குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும் பிரதமர் மோடி, புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களை மக்களவையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக, பாராளுமன்றத்துக்கு இந்திய தேசிய லோக் தளம் கட்சி எம்.பி. துஷ்யந்த் சவுதாலா டிராக்டரில் வந்த சுவாரசிய சம்பவமும் அரங்கேறியது. இதையடுத்து, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், மக்களவை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.