கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனின் மனைவி, குழந்தை எரித்துக்கொலை - பெண் வெறிச்செயல்

சுஜாதாவுடனான தொடர்பை கைவிடுமாறு மமதா தனது கணவரை வலியுறுத்தி வந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நகேஷ். இவரது மனைவி மமதா (25 வயது). இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40 வயது) என்பவருடன் நகேசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நகேசுக்கும், மமதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சுஜாதாவுடனான தொடர்பை கைவிடுமாறு மமதா தனது கணவரை வலியுறுத்தி வந்தார். சுஜாதாவையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சுஜாதா கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். மமதா உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலனோடு உல்லாசம் அனுபவிக்க முடியாது என்று நினைத்த சுஜாதா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சுஜாதா, நகேஷ் இல்லாத நேரத்தில் மமதா வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு மமதா தாய்ப்பால் கொடுத்து கொண்டு இருந்தார். உடனே தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து மமதா மீதும், குழந்தை மீதும் ஊற்றி தீ வைத்தார். இதில் அலறித்துடித்த தாயும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். உடனே சுஜாதா ஓடி விட்டார். தீக்காயம் அடைந்த குழந்தையையும், தாயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

Also read:சிகரெட் விலை ரூ.2-லிருந்து ரூ.8.50 வரை உயர்ந்தது... புகையிலை பொருட்களின் விலையும் அதிகரிப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையுடன் தாய் எரித்துக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட்; கோவாவை மத்திய அரசு முற்றிலும் மறந்து விட்டது: கெஜ்ரிவால் தாக்கு

சென்னை: கடலோர காவல் படை 50-வது நிறுவன தினம் விமரிசையாக கொண்டாட்டம்

ஜனாதிபதி மாளிகை வளாக தோட்டம் திறப்பு: பொதுமக்கள் நாளை மறுநாள் முதல் பார்வையிடலாம்

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் தாக்கல்: விலை கூடவும் குறையவும் வாய்ப்புள்ள பொருட்கள் எவை எவை?