சிகரெட் விலை ரூ.2-லிருந்து ரூ.8.50 வரை உயர்ந்தது... புகையிலை பொருட்களின் விலையும் அதிகரிப்பு

புகையிலை மீது 82 சதவீத கலால் வரியும், குட்கா மீது 91 சதவீத கலால் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரி விதிப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அன்று முதல், சிகரெட் புகையிலை, குட்கா, ஜர்தா உள்ளிட்ட பிற புகையிலைப் பொருள்கள் மீது 28 சதவீத ஜி.எஸ்.டியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகின்றன.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் பான் மசாலா பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி விகிதம் குறையாமல், உயர் அளவிலேயே இருப்பதை உறுதி செய்யும் வகையில், 'மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025' மற்றும் பான் மசாலா உற்பத்தி மீது புதிய செஸ் வரி விதிக்கும் "தேசியப் பாதுகாப்பு செஸ் மசோதா 2025" ஆகியவை பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 2 புதிய திருத்தச் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

கோப்புப்படம்
சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை வரவேற்பு

இதன்படி, 65 மி.மீ. நீளம் கொண்ட பில்டர் இல்லாத சிகரெட் மீது கூடுதலாக தலா ரூ.2.05 வரி விதிக்கப்பட்டுள்ளது. இதே நீளம் கொண்ட பில்டர் சிகரெட் மீது கூடுதலாக ரூ.2.10 வரி விதிக்கப்பட்டுள்ளது. 65 மி.மீ. முதல் 70 மி.மீ. நீளம் கொண்ட சிகரெட் மீது ரூ.3.40 முதல் ரூ.4 வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

70 மி.மீ. முதல் 75 மி.மீ. நீளம் கொண்ட சிகரெட் ரூ.5.40 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறான அல்லது தரமற்ற வடிவமைப்பு கொண்ட சிகரெட்டுகள் மீது அதிகபட்சமாக தலா ரூ.8.50 கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. மெல்லக்கூடிய வகையிலான ஜர்தா, புகையிலை மீது 82 சதவீத கலால் வரியும், குட்கா மீது 91 சதவீத கலால் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்

மேலும், புதிய தேசியப் பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள பான் மசாலா உற்பத்தியாளர்கள் இன்று முதல் நிறுவனத்தை புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிறுவனங்கள், அதிலுள்ள அனைத்து பேக்கிங் எத்திரங்களும் நன்கு தெரியக்கூடிய வகையில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதும், அதன் பதிவுகளை குறைந்தபட்சம் 24 மாதங்களுக்குப் பாதுகாத்து வைத்திருப்பதும் கட்டாயமாகும்.

இந்த நிறுவனங்களில் உள்ள எந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் கொள்ளளவையும் கலால் அதிகாரிகளிடம் இந்த நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எந்திரங்களின் உற்பத்தித் திறனுக்கேற்ப செஸ் வரி விதிக்கப்படும். அதாவது, 40 சதவீத ஜி.எஸ்.டி.யை கணக்கி ல் எடுத்துக்கொண்ட பிறகு, பான் மசாலா மீதான மொத்த வரிச்சுமை தற்போதைய 88 சதவீத அளவிலேயே நீடிக்கும். அதே நேரத்தில் ஒரு எந்திரம் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 15 நாள்கள் செயல்படாமல் இருந்தால், கலால் வரியில் தள்ளுபடி கோரவும் நிறுவனங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான இந்த கலால் வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு திரும்ப பகிர்ந்தளிக்கப்படும். தேசியப் பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ், பான் மசாலா நிறுவனங்கள் மீது அவற்றிலுள்ள எந்திரங்களின் உற்பத்தித் திறனுக்கேற்ப இந்த செஸ் வரி விதிக்கப்படும். எனவே, உற்பத்தித் திறனுக்கேற்ப ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இந்த செஸ் வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செஸ் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரத் திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com