சென்னை,
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவு தர கோருவதற்காக சென்னை வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு கோர வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
அவர், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தர கோர உள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரிடம் உடல் நலம் விசாரிக்கவும் செய்கிறார்.