செய்திகள்

அம்பத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

அம்பத்தூர் அருகே வீட்டு வாசலில் செல்போன் பேசி கொண்டிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வீரமணி(வயது 46). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு யஸ்வந்த் என்ற மகனும், கீர்த்தி என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை வீரமணி, தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் வீரமணியை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த வீரமணி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், கொலையான வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் அம்பத்தூரில் இயங்கி வந்த பிரபல தொழிற்சாலை தற்போது தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக கடந்த சில வருடங்களாக மூடிய நிலையில் உள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தை வீரமணி உள்பட அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்கள் வசம் கையகப்படுத்த முயற்சி செய்ததாகவும், இந்த தொழில் போட்டியில் வீரமணி கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொலையாளிகள் பிடிபட்டால் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்