செய்திகள்

தர்மபுரி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்-2 பேர் பலி

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி ராஜபேட்டை அருகே நேற்று இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவரும் வந்தனர். இவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்களில் ஒருவரின் பெயர் பூவரசன் (வயது 25) என தெரியவந்தது. மற்றொருவரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவரவில்லை. மேலும் படுகாயம் அடைந்தவரின் பெயர் விவரமும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை