செய்திகள்

மீஞ்சூர் அருகே மனைவியின் கள்ளக்காதலன் வெட்டிக்கொலை 2-வது கணவருக்கு வலைவீச்சு

வீடு புகுந்து மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 2-வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கேசவபுரத்தில் வசித்து வருபவர் சபரிதா (வயது 25). இவர், முதல் கணவரை பிரிந்து தனது 2வது கணவர் பசுபதி(26) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் சபரிதாவுக்கும், திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி கணேஷ்குமார் (34) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பசுபதிக்கும், சபரிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சபரிதாவை விட்டு பசுபதி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து சபரிதா, தனது கள்ளக்காதலன் கணேஷ்குமாருடன் கேசவபுரத்தில் வசித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பசுபதி, கணேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக தனது நண்பர்களுடன் கேசவபுரம் கிராமத்துக்கு சென்ற பசுபதி, அங்கு வீட்டில் இருந்த கணேஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கணேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செயது தப்பி ஓடிய பசுபதி மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை