படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. குறிப்பாக ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் படப்பை, வஞ்சூவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகிறது. அடிக்கடி சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவில் மாடுகள் நின்றும், படுத்தும் கொள்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் உயிருக்கு பயந்து வாகனத்தை ஓட்டும் நிலையில் செல்கின்றனர்.
அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே படப்பையை அடுத்த வஞ்சூவாஞ்சேரி. செரப்பனஞ்சேரி பகுதிகளில் சாலையின் சுற்றி திரியும் மாடுகளையும் பிடித்து அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.