செய்திகள்

கோவிலில் ரகசிய திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு - ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

கோவிலில் ரகசிய திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு அருகே ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். கோவிலில் ரகசிய திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா ரெயில் நிலையம் அருகே வீராபுராவில் உள்ள தண்டவாளத்தில் நேற்று காலையில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் உடலில் பலத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தனர். அந்த தண்டவாளம் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தொட்டபள்ளாப்புரா ரெயில்வே போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்தவர்கள், பெங்களூரு புறநகர் தாட்டபள்ளாப்புரா அருகே சாந்திநகரை சேர்ந்த லீலாவதி(வயது 18), கச்சேரி பாளையாவை சேர்ந்த விஜய்(20) என்று தெரிந்தது.

மேலும் போலீஸ் விசாரணையில் விஜயும், லீலாவதியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்துள் ளது. உடனே அவர்கள், விஜய், லீலாவதியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் லீலாவதிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அவர் தனக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கிடையில், விஜயும், லீலாவதியும் ஒரு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி லீலாவதியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள், தொட்டபள்ளாப்புரா போலீசில் விஜய் மீது புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, விஜய், லீலாவதியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் சமாதானமாக பேசினார்கள். பின்னர் லீலாவதியை, அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லீலாவதியை சந்தித்து விஜய் பேசியதாக தெரிகிறது.

அப்போது 2 பேரின் பெற்றோர் எதிர்ப்பை மீறி வாழ முடியாது என்பதால் விஜயும், லீலாவதியும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாக தெரிகிறது. அதன்படி, நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர் விஜய், லீலாவதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்