செய்திகள்

விஜய் வெற்றி ரகசியம் பகிர்ந்த பிருதிவிராஜ்

விஜய் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்று வசூல் குவிப்பது பிற மொழி நடிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. விஜய்யின் வெற்றி ரகசியம் பற்றி பிரபல மலையாள நடிகர் பிருதிவிராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

அதில் விஜய்யிடம் உங்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிருதிவிராஜ் கூறும்போது, விஜய்யிடம் உங்களுடைய வெற்றிக்கான மந்திரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்பேன். விஜய்க்கு எந்த மாதிரியான படம் வெற்றி பெறும் என்று நன்றாக தெரியும். ஒரு கதையை கேட்கும்போதே அது வெற்றி பெறுமா? இல்லையா என்பதை விஜய்யால் கணித்து விட முடிகிறது. எந்த கதை வெற்றி பெறும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எல்லா நடிகர்களுக்கும் இந்த திறமை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிருதிவிராஜ் தமிழில் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்