செய்திகள்

பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மக்களவை தொகுதியில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலை புறக்கணிக்க கோரி பிரிவினைவாதிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

மக்களவை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹூரியத் கான்பரன்ஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

பிரிவினைவாதிகள் முழு அடைப்பு அழைப்பால், காஷ்மீரில் இன்று இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடைகள், வணிகவளாகங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் பாரமுல்லா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு