சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு: 190 காலியிடங்கள்

புற்றுநோய் கல்வி -ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கான நிறுவனம் ஏ.சி.டி.ஆர்.இ.சி. என அழைக்கப்படுகிறது.

மும்பையில் செயல்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்போது ஆராய்ச்சி அதிகாரி, மருத்துவ அதிகாரி, நர்ஸ், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 190 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நர்ஸ் மற்றும் துணை மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. 30 வயதுக்கு உடப்ட்ட இளைஞர்களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு வேறுபடுகிறது. அது பற்றிய முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந்தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை அறிய www.actrec.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி