சிறப்புக் கட்டுரைகள்

ஆகஸ்டு 2 வரையிலான 2 வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 12% வளர்ச்சி - பாரத ரிசர்வ் வங்கி தகவல்

ஆகஸ்டு 2 வரையிலான 2 வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

கடன், டெபாசிட்

இந்திய வங்கிகளின் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சி குறித்து பாரத ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ஆகஸ்டு 2 நிலவரப்படி வங்கிகள் ஏறக்குறைய ரூ.97.30 லட்சம் கோடி கடன் வழங்கி உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது வங்கிகள் வழங்கிய கடன் 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஜூலை 19 வரையிலான முந்தைய இரண்டு வாரங்களிலும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.96.57 லட்சம் கோடியாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 10.10 சதவீதம் உயர்ந்து ரூ.127.45 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய இரண்டு வாரங்களில் திரட்டிய டெபாசிட் 10.59 சதவீதம் உயர்ந்து ரூ.126.49 லட்சம் கோடியாக இருந்தது. வங்கிகள் வழங்கிய உணவு அல்லா கடன் ரூ.96.67 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. உணவுக்கடன் ரூ.62.75 லட்சம் கோடியாக உள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உணவுக்கடன்

நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தனிநபர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் உணவு அல்லா கடனாகும். நெல், கோதுமை கொள்முதலுக்காக இந்திய உணவுக் கழகத்திற்கு வங்கிகள் வழங்குவது உணவுக்கடன் என்று அழைக்கப்படுகிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி