சிறப்புக் கட்டுரைகள்

நவம்பர் வரையிலான 8 மாதங்களில் விற்பனை அடிப்படையில் மாருதி சுசுகியின் செடன் டிசையர் மாடல் முதலிடம்

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், நவம்பர் வரையிலான முதல் 8 மாதங்களில் விற்பனை அடிப்படையில் மாருதி சுசுகியின் செடன் டிசையர் மாடல் முதலிடம் பிடித்து இருக்கிறது.

தினத்தந்தி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

குருகிராம்

மாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாடுகளை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அண்மைக் காலமாக இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்-நவம்பர் மாத காலத்தில் விற்பனை அடிப்படையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் செடன் டிசையர் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. இதன் விற்பனை ஏறக்குறைய 1.2 லட்சம் கார்களாக இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1.50 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இது 1.9 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 1.53 லட்சம் கார்களாக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 1.6 சதவீதம் குறைந்து (1.46 லட்சத்தில் இருந்து) 1.43 லட்சமாக குறைந்துள்ளது. இதில் சுவிப்ட், எஸ்டிலோ, டிசையர், பேலினோ உள்ளிட்ட காம்பாக்ட் கார்கள் விற்பனை 7.6 சதவீதம் அதிகரித்து 78,013-ஆக உயர்ந்து இருக்கிறது. ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் விற்பனை 12 சதவீதம் குறைந்து 26,306-ஆக இருக்கிறது.

இந்நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,358 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 39 சதவீதம் குறைவாகும். அப்போது அது ரூ.2,240 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 74 சதவீதம் சரிவடைந்து ரூ.680 கோடியாக உள்ளது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது மாருதி சுசுகி நிறுவனப் பங்கு ரூ.7,403-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.7,420.95-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,310-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.7,327.40-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.47 சதவீத சரிவாகும்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்