மொபைல்

சாம்சங் கேலக்ஸி எஸ் 23

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பிரிவில் எஸ் 23 மாடலில் எலுமிச்சை மஞ்சள் நிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

ஏற்கனவே இந்த மாடலில் கருப்பு, பச்சை, லாவெண்டர் மற்றும் கிரீம் வண்ணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மாடலில் ஆன்லைன் விற்பனைக்கென பிரத்யேக வண்ணங்களை அறிமுகம் செய்துள்ளது.

இது சிவப்பு, கிராபைட், மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். தற்போது நேரடி விற்பனையகங்களில் எலுமிச்சை மஞ்சள் வண்ண ஸ்மார்ட் போனை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். ரேம் மற்றும் நினைவகத்தில் எவ்வித மாறுதலும் கிடையாது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.74,999.

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.79,999.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்