மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் அம்பரேன் நிறுவனம் பவர்ஹப் 200 என்ற பெயரிலான 60 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்வோர், நேரக் கட்டுப்பாடின்றி தங்கள் கருவிகளைப் பயன்படுத்த இந்த பவர் பேங்க் உறுதுணையாக இருக்கும்.
இது 200 வாட் திறனை வெளிப்படுத்தும். இதன் மூலம் ஸ்மார்ட்போன் களை மட்டுமின்றி சிறியரக குளிர் சாதன பெட்டியையும் இயக்க முடியும். யு.எஸ்.பி. ஏ, கியூ சி, ஏ.சி. மற்றும் டி.சி. போர்ட் மூலம் இதை சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
பேட்டரியின் மின்திறனை உணர்த்தும் இண்டிகேட்டரும் இதில் உள்ளது. பேன், லேப்டாப், வை-பை ரவுட்டர்களையும் இதனுடன் இணைத்து செயல்படுத்த முடியும்.
இந்த பவர் பேங்கின் விலை சுமார் ரூ.14,999.