இளைஞர் மலர்

பெல் நிறுவனத்தில் வேலை

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (பெல்) புரொபேஷனரி என்ஜினீயர், புரொபேஷனரி அதிகாரி, புரோபேஷனரி கணக்கு அதிகாரி ஆகிய பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 232 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பெங்களூரு, புனே, ஐதராபாத், சென்னை, நவி மும்பை உள்பட பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்பட உள்ளனர். 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. பதவிகளின் தன்மைக்கேற்ப பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ, சி.ஏ. போன்ற படிப்புகள் கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-10-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://bel-india.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை