கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை உயிரிழப்பு... பாட்டி கண்முன்னே பரிதாபம்

மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் வைத்திஉடையார் காட்டு பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜிகுமார். இவருடைய மனைவி நந்தினி (வயது 27). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 10 மாத பெண் குழந்தை இனன்யா. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்போது இவர்களது வீட்டின் அருகில் உள்ள நந்தினியின் தாய் கலைச்செல்வியிடம் குழந்தையை விட்டு செல்வது வழக்கம்.

கலைச்செல்வி மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம் வைத்து வீட்டிலேயே துணிகள் தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் முன்பு வழக்கம்போல குழந்தையை பாட்டி வீட்டில் விட்டு சென்றனர். குழந்தை அங்கும், இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. கலைச்செல்வி துணி தைத்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இனன்யா, திடீரென தையல் எந்திரத்துக்கு செல்லும் மின்ஒயரில் கை வைத்ததாக தெரிகிறது. இதில் பாட்டி கலைச்செல்வி கண்முன்னாலேயே மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்