தமிழக செய்திகள்

10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்குகல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தபால் அலுவலக கணக்குடன் ஆதார்-செல்போன் எண்ணை இணைக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.

தினத்தந்தி

கல்வி உதவித்தொகை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், தபால் அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அதிக அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான 10 ஆயிரத்து 79 மாணவ-மாணவிகள் உள்ளனர். இவர்களில் 28 சதவீதம் பேருக்கு மட்டுமே தபால் அலுவலகத்தில் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஆதார், செல்போன் எண் ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிளஸ்-2 தேர்வு

இதனை 100 சதவீதம் நிறைவேற்ற தலைமை ஆசிரியர்கள், தபால் அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு காலதாமதம் இல்லாமல் உதவித்தொகை விரைவாக சென்று சேருவதற்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7 சதவீத மருத்துவ இடம் ஒதுக்கீடு உள்பட அரசின் பல்வேறு திட்டங்களும் எளிதாக சென்றடைய வேண்டும்.

இதையொட்டி சாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்க வேண்டும். இதற்கிடையே பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் 10 சதவீத மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாமல் உள்ளனர். இவர்களை கண்டறிந்து இனிவரும் தேர்வை எழுத வைக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவ-மாணவிகளுக்கு சென்றடைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் பேசினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்