தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் இறந்தது.

தினத்தந்தி

செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று மாலை 3.55 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் தென்காசி கீழப்புலியூர் பகுதியில் 4.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பாதையில் படுத்திருந்த 12 ஆடுகள் மீது ரயில் மோதியது. இதில் 12 ஆடுகளும் அந்த இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக விநாயகம் மற்றும் போலீசார் சென்று இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்