தமிழக செய்திகள்

தக்கலை அருகே 13 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது

தக்கலை அருகே 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தக்கலை, 

தக்கலை அருகே 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குட்கா பறிமுதல்

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டி மற்றும் போலீசார் நேற்று காலையில் திருவிதாங்கோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

உடனே அவருடைய பையை வாங்கி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் விசாரணை நடத்தியதில், திருவிதாங்கோடு பழைய பள்ளி தெருவை சேர்ந்த செய்யதலி (வயது 54) 13 கிலோ குட்காவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.7 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்