தமிழக செய்திகள்

17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த விவகாரம் - 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

உளுந்தூர்பேட்டை அருகே 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த விவகாரத்தில், 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இவ்வாறு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த நிலையில், சிறுமி கருவுற்றிருக்கிறார்.

இதனிடையே கடந்த வாரம் சிறுமி தனது வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்த போது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்தது. 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த போலீசார், இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் சிறுமி மற்றும் குழந்தை இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்