தமிழக செய்திகள்

பெண் உள்பட 2 பேர் கைது

புதுச்சேரியில் அழகுநிலையத்தில் விபசாரம் நடந்தது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 5 அழகிகளை மீட்டனர்.

தினத்தந்தி

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மசாஜ் சென்டர், அழகுநிலையம் என்ற பெயரில் விபசார தொழில் கொடி கட்டி பறக்கிறது. இதுதொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில், புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் அந்த அழகுநிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகுநிலைய உரிமையாளர் முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்த ஜெசிமா (வயது 35) உல்லாசத்துக்கு வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ராஜகோபால் (63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அழகிகள் 5 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்