திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று மன்னார்புரம் சந்திப்பில் உள்ள டீ கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வர்கீஸ் ராஜன் (வயது 32), முருகன் (55) ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவாகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களின் கடையில் இருந்து 551 புகையிலை பாக்கெட்டுகளையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.