தமிழக செய்திகள்

மின்கசிவால் 2 கடைகள் தீப்பற்றி எரிந்தன

மின்கசிவால் 2 கடைகள் தீப்பற்றி எரிந்தன.

தினத்தந்தி

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருகே உள்ள புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 62). இவர் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே அப்பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த்(33) பேன்சி கடை வைத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கண்ணுசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடையை திறக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அவரது கடையில் திடீரென வயரில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி எரிந்தது. இதில் பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.

மேலும் அருகே உள்ள விஜய் ஆனந்த் கடைக்கும் தீ பரவியது. இதனைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்