தமிழக செய்திகள்

2024 நாடாளுமன்ற தேர்தல்: திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தெடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி நடந்த பெதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு