தமிழக செய்திகள்

மாநில கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு திருச்சியில் 25 வீராங்கனைகள் தேர்வு

மாநில கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு திருச்சியில் 25 வீராங்கனைகள் தேர்வு நடந்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 13 முதல் 24 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மாநில அளவில் சென்னையில் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் திருச்சி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் தேர்வு திருச்சி சாரநாதன் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த தேர்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தேர்வுக்கு வந்திருந்த வீராங்கனைகளை பந்து வீசச்செய்தும், பேட்டிங் செய்ய வைத்தும், கீப்பிங் செய்ய வைத்தும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். முகாமின் முடிவில் 25 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை