தமிழக செய்திகள்

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே 25,617 பேர் பயன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பேரிடர் காலத்தில் சுகாதாரத் துறையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டர். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

'பேரிடர் காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக சுகாதாரத் துறையில் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளேன்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே 25,617 பேர் இதனால் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கொரோனா 3-வது அலை வந்தாலும் அதனை தடுக்க அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது, இம்மாவட்டத்தில் 98 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,

இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதில் அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டையே திகழ்கிறது, இம்மாவட்டத்தில் 60% கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்