தமிழக செய்திகள்

சேலம், நெல்லை, மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-வது வகுப்பு பொது பெட்டி இணைப்பு

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

தினத்தந்தி

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22157), வரும் செப்டம்பர் 5-ந் தேதி முதலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22158), வரும் செப்டம்பர் 8-ந் தேதி முதலும், ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக, 2-வது வகுப்பு பொதுபெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22154), வரும் செப்டம்பர் 6-ந் தேதி முதலும், மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22153), வரும் செப்டம்பர் 7-ந் தேதி முதலும், ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளது.

மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (11021), வரும் செப்டம்பர் 9-ந் தேதி முதலும், மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (11022), வரும் செப்டம்பர் 11-ந் தேதி முதலும், ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்