தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கான 2ம் நாள் ரெயில் டிக்கெட் முன்பதிவு; 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) பேகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பெங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பெங்கல் கெண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி 2ம் நாள் ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோர் இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதில் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை