தமிழக செய்திகள்

தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம்..!

தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏ.எஸ்.பியாக இருந்த ரவிச்சந்திரன், எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி ஏ.எஸ்.பியாக இருந்த ரமேஷ் பாபு, சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* அரியலூர் ஏ.எஸ்.பி. மலைசாமி, சொத்து உரிமை அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சேலம் சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பியாக இருந்த ஏ.சி. செல்லபாண்டியன், ஆவடி 5வது பட்டாலியன் சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?