தமிழக செய்திகள்

பல்லடம் அருகே 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சுரேஷ், மகேஷ், மாரீஸ்வரி, புஷ்பராஜ் ஆகிய நான்கு பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 4 பேரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த திருப்பூர், கள்ளக்கிணறு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது பல்லடம் அருகே மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்