தமிழக செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று 42-வது பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி, கவர்னர் ,முதல்-அமைச்சர் பங்கேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை

2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி வைத்தார் , இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார். பிரதமர் வருகயால் பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்