தமிழக செய்திகள்

கொரோனாவுக்கு 5 பேர் பலி

புதுச்சேரியில் புதிதாக 1,897 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

தினத்தந்தி

புதுச்சேரியில் புதிதாக 1,897 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

1,897 பேருக்கு கொரோனா

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 1,897 பேருக்கு தொற்று உறுதியானது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 174 பேரும், வீடுகளில் 15 ஆயிரத்து 522 பேரும் என 15 ஆயிரத்து 696 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,264 பேர் குணமடைந்தனர்.

5 பேர் பலி

ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், மோந்திரேஸ் வீதியை சேர்ந்த 90 வயது முதியவர் பலியாகி உள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தட்டாஞ்சாவடியை சேர்ந்த 55 வயது பெண், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த 89 வயது முதியவர், வில்லியனூரை சேர்ந்த 80 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,906 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் உயிரிழப்பு ஒன்று, இரண்டு என்றுஇருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்து இருப்பது புதுவை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி

புதுவையில் தொற்று பரவல் 39.51 சதவீதமாகவும், குணமடைவது 88.44 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 982 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,307 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 342 பேரும் செலுத்தி கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 21 ஆயிரத்து 213 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்