தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

தினத்தந்தி

அரிமளம் அருகே ராயவரம் கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 60). இவர் நேற்று முன்தினம் ராயவரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பரில், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்