தமிழக செய்திகள்

கள்ளிக்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி சாவு

கள்ளிக்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருமங்கலம்,

கள்ளிக்குடி அருகே உள்ள பேய்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகள்கள் காவியா (வயது 10). 5-ம் வகுப்பு மாணவி. ஆதிலட்சுமி(8). 3-ம் வகுப்பு மாணவி. சம்பவத்தன்று காளிமுத்து வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் காவியாவும், ஆதிலட்சுமியும் பெருமாள் கோவில் அருகே உள்ள குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காவியா குளத்தின் அருகே உள்ள கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்து விட்டார். இதை பார்த்த ஆதிலட்சுமி ஊருக்குள் சென்று தெரிவித்தார். உடனே ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து குளத்தில் மூழ்கிய காவியாவை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே காவியா இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்