தமிழக செய்திகள்

குடும்பத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருவாலங்காடு அருகே குடும்பத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தனியார் நிறுவன ஊழியர்

திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.ஜி.கே.புரம் கிராமத்தில் வசித்தவர் சத்யா (வயது 27). இவர் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், அன்பரசன் என்ற மகனும் வர்ஷாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடன் பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த மனைவி புவனேஸ்வரி சத்யா தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கனகம்மாச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்