தமிழக செய்திகள்

கல்லூரி மாணவிகள் விடுதி வளாகத்தில் திடீர் தீ

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி வளாகத்தில் திடீர் தீ

தினத்தந்தி

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் உள்ளது. இங்கு கல்லூரி வளாகத்தின் தெற்கு பகுதியில் பெண்கள் விடுதி அமைந்துள்ளது. நேற்று மதியம் விடுதி அருகே நின்ற மரங்கள், செடி கொடிகளில் திடீரென தீ பிடித்தது. காற்று அதிகமாக வீசியதால் தீ மள...மள... என வேகமாக எரியத் தொடங்கியது. இதனால் கல்லூரி வகுப்பறைகள் மற்றும் மாணவ- மாணவிகளின் விடுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

------------

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்