தமிழக செய்திகள்

விபத்தில் பெண் பலி

சுரண்டையில் விபத்தில் பெண் இறந்தார்

சுரண்டை:

சுரண்டையை அடுத்த வீரசிகாமணி அருகே வெள்ளாளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 67). இவரது மனைவி பகவதி (64). நேற்று மாலையில் கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளில் வெள்ளாளங்குளம் கிராமத்தில் இருந்து சுரண்டைக்கு உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மாட்டார் சைக்கிள் சுரண்டையில் வந்தபோது பின்னால் வந்த லாரி முந்தி சென்றது. இதனால் நிலை தடுமாறிய வெள்ளைச்சாமி தனது மோட்டார்சைக்கிளை நிறுத்த முயற்சி செய்தார். அப்போது பின்னால் இருந்த பகவதி எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பகவதி இறந்தார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி விரைந்து வந்து பகவதியின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் அரியலூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சதீஷ் (32) கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்தில் காயம் அடைந்த வெள்ளைச்சாமி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி