தமிழக செய்திகள்

கூடலூர் அருகே அரளி விதைகளை தின்று வாலிபர் தற்கொலை

கூடலூர் அருகே அரளி விதைகளை தின்று வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் தனுஷ் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்த தனுஷ், அதன்பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதற்கிடையே தனுஷ் வயிற்றுவலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இன்று முன்தினம் அரளி விதைகளை அரைத்து குடித்தார். பின்னர் தனது நண்பரான மாரீஸ் என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டதாக தெரிவித்தார்.

உடனே அவர், தனுசை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி தனுஷ் உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்