சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.